கணவனை பிரிந்து வந்த அக்காவுக்கு தம்பியால் நேர்ந்த கொடுமை! விசாரணையில் வெளியான உண்மை!
கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த சொந்த அக்காவையே தம்பு பாலியல் வண்புணர்வு செய்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய காலத்தில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், பெண் ஒருவர் சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது தம்பியால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் அளித்து கதறினார்.
சென்னை மயிலாப்பூர் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் திருமணமான நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதையடுத்து, அவரது இளைய சகோதரரும், திருமணம் செய்து கொள்ளாமல் அதே வீட்டில் வசித்து வருகிறார். அக்காவும் தம்பியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் சொந்த சகோதரி என்றும் பாராமல் அந்தப் பெண்ணின் தம்பி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அடிக்கடி சொந்த அக்காவை வன்புணர்வு செய்து வந்துள்ளார்.
இந்த கொடுமை பல ஆண்டுகளாக நடந்து வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தொல்லை அதிகரித்ததால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்தப் பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது தம்பியால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் அளித்து கதறியுள்ளார்.
இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது சகோதரர் அந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்தது உண்மை என தெரிய உறுதியானது.
இதனால், அந்த நபர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடன்பிறந்த சகோதரி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமையில் தம்பி ஈடுபட்டுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.