மீண்டுமா? பிக் பாஸ்க்கு வா வான்னு கூப்டுறாங்க!..ஓவியாவின் உருட்டை கண்டுபிடித்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!!
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு அழைப்பதாக நடிகை ஓவியா கூறியது சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் இதயத்தை களவாடிய நடிகை தான் ஓவியா.
இவர் வந்த முதல் சீசனே மக்கள் மத்தியில் பல சர்ச்சைகளை எழ காரணமாக இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் ஆரவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஓவியா வெளியே சென்றதும் '90 எம்எல்' என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாரித்தார்.
இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு அழைப்பதாக பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
பிக்பாஸில் மீண்டும் ஓவியாவா?
பிக் பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ள நிலையில், அதன் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.
அந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ஓவியா இந்த முறை 2 பிக் பாஸ் வீடுகளா? அது எப்படி ஒண்ணு சென்னையிலும், ஒண்ணு பாம்பேவிலும் இருக்குமா? என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இப்படியொரு நிலையில் பிக்பாஸ் துவக்க விழாவிற்கு துவக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஓவியாவை அழைத்துள்ளார்களாம்.
ஆனால் போகலாமா? இல்லையா? என தான் யோசிக்கிறார் என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், மீண்டும் ஓவியா வந்தால் பிக்பாஸின் டிஆர்பி எகிறும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |