மோடி பற்றி கேட்ட ரசிகர்! ஒற்றை மீமில் பதில் சொன்ன ஓவியா- என்னனு பாருங்க?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் உலகப்புகழ்பெற்ற ஓவியா, பிரதமர் மோடி குறித்து பகிர்ந்துள்ள டுவிட் வைரலாகி வருகிறது.
நாளை நமதே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா, தொடர்ந்து களவாணி, மெரினா, கலகலப்பு என பல படங்களில் நடித்துள்ளார்.
இருந்தாலும் அவரை பிரபலமடைய செய்தது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான், இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ஆர்மி பட்டாளமே இருந்தது.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதும் கிடைக்கவில்லை.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஓவியா, நேற்று முன்தினம் இரவு ரசிகர்களுடன் உரையாடியானார்.
அப்போது ரசிகர் ஒருவர், மோடி அரசு பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கேட்டார், அதற்கு ஒரு மீமை பதிலாக அளித்துள்ளார், அதில், என்ன பண்றது சார், எல்லாம் சிரிப்பா இருக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.
— Oviyaa (@OviyaaSweetz) April 22, 2021
இந்த பதில் சமூக வலைதளங்களிவ் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கோ பேக் மோடி என ஓவியா வெளியிட்ட பதிவிற்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.