ஃபிரிட்ஜிக்குள் அமர்ந்திருக்கும் இளைஞர்! வதைக்கும் வெயிலில் தப்பிக்க இப்படியுமா?
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை சமாளிக்க சீன இளைஞர் ஒருவர் ஃபிரிட்ஜில் அமர்ந்திருக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
வாட்டி வதைக்கும் வெயில்
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நிலை பரிதாபமாகவே இருக்கின்றது.
வசதியான வீடுகளில் ஏர் கண்டிஷ்னர், ஏர் கூலர் என்று பலவற்றினை வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் நடுத்தர மக்களோ தங்களின் குடும்ப சூழ்நிலையால் கஷ்டமே படுகின்றனர்.
இங்கு சீன இஞைர் ஒருவர் வெயிலை சமாளிக்க முடியாமல் தன்னை குளிர்விக்க ஃபிரிட்ஜில் அமர்ந்துள்ளார். பிளாஸ்டிக் ஸ்டூலில் ஃபிரிட்ஜில் அமர்ந்திருக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் கடந்த வாரம் வெயிலின் தாக்கம் 37.9 ஆக இருந்த நிலையில், குறித்த நபர் சூப்பர் மார்கெட்டில் இவ்வாறு இருந்துள்ளது காணொளியில் தெரிகின்றது.