Smart Phone-ல் அதிகமாக விளையாடுபவரா நீங்கள்? பவர்புல் போன்களின் லிஸ்ட் இதோ
சக்திவாய்ந்த செயலி உடன் வரும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம், அவற்றின் விலை இவற்றினை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Realme GT6:
Realme GT6 என்பது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8S, Gen3 செயலியுடன் வரும் மற்ற ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது 6.78 இன்ச் 1.5K ரெசல்யூஷன் LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத திரையுடன், 6000 நிட்ஸ் பிரகாசத்தையும், 50 எம்பி பின்புற கேமராவையும் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப வேரியண்ட்டின் விலை ரூ. 40,999.
Honor 200 Pro:
சிறந்த செயலி கொண்ட ஸ்மார்ட்போனில் அடுத்ததாக Honor 200 Pro இருக்கின்றது. இதன் அடிப்படை வேரியண்ட்டில் விலை ரூ. 57,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இது 6.78 இன்ச் முழு HD+ OLED வளைந்த காட்சியையும், கமெராவைப் பொருத்த வகையில், 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 50 எம்பி முன் கேமரா உள்ளது.
Moto Razr 50 Ultra:
மோட்டோ ரேசர் 50 அல்ட்ரா-வின் ஆரம்ப வேரியண்டின் விலை ரூ.55,000 ஆகும். மேலும் இது 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவையும், இதன் திரை 1.5K தீர்மானம் கொண்டதாகவும், கமெராவைப் பொறுத்தவரை, 60 எம்பி பின்புற கேமரா மற்றும் 50 எம்பி முன் கேமரா உள்ளது.
Poco F6:
Poco F6 ஆனது Snapdragon 8S, Gen3 செயலி மூலம் இயக்கப்படுவதுடன், 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, திரை 1.5K தீர்மானம் கொண்டது. ஆரம்ப வேரிண்ட்டின் விலை ரூ. 29,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 50 எம்பி கேமரா உள்ளது.
Xiaomi 14 CIVI:
Xiaomi 14 CIVI ஸ்மார்ட்போனின் ஆரம்ப மாறுபாட்டின் விலை ரூ. 42,999 ஆகும். 6.55 அங்குல திரையைக் கொண்டுள்ளதுடன், 120 ஹெர்ட்ஸ் AMOLED திரையாகவும் இருக்கின்றது. கேமராவைப் பொறுத்த வரையில் 50 மெகாபிக்சல்கள் கொண்ட 32 எம்பி முன் கேமராவை கொண்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |