Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல்
கழுகு ஒன்று மீனை தனது பசிக்கு எடுத்துக் கொண்டு செல்லும் போது, அதனை பெலிகான் பறவை ஒன்று தட்டிப்பறித்து தனக்கு உணவாக்கியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகின் மீன் வேட்டை
இன்று கழுகுகளில் மீன் வேட்டைகள் அதிகமாக காணொளியாக வெளியாகியுள்ளது. அதிலும் கூர்மையான பார்வையைக் கொண்ட கழுகு வேட்டையாடுவதை பார்ப்பதே தனி அழகு தான்.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் நீந்தும் தனக்கான இரையை அவதானித்துவிடுகின்றது. இதனை நிரூபிக்கும் வகையில் பல காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.

எத்தனை தான் புதிய புதிய காட்சிகளை பார்த்தாலும், சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது. இங்கும் கழுகு ஒன்று மீனை வேட்டையாடி வானில் பறந்து செல்கின்றது.
அத்தருணத்தில் அதனை நோட்டமிட்ட பெலிகான் பறவை ஒன்று குறித்த மீனை கழுகிடமிருந்து தட்டிப்பறித்து தனக்கு உணவாக்கியுள்ளது.
ஆரம்பத்தில் கழுகு தனது பிடியை விடாமல் இருந்தாலும், பெலிகான் பறவை தனது முழு பலத்தையும் வைத்து மீனை தனக்கு உணவாக எடுத்துக் கொண்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |