ஒஸ்கார் விருதை தட்டித் தூக்கிய நாட்டு நாட்டு பாடல்! வைரலாகும் வீடியோ
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர்.
மிகப்பெரும் வெற்றியீட்டிய இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டையைக் கிளப்பியது.
அதிலும் குறிப்பாக இந்தத் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலானது மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது.
சமூக வலைத்தளத்தை திறந்தாலே யாரைப் பார்த்தாலும் இந்தப் பாடலில் உள்ள நடனத்தை பிரதிபலிக்கும் விதமாக டிக்டொக் செய்து தள்ளினர்.
அகாடமி விருதை தட்டிச் சென்றது
இந்தப் பாடலின் வித்தியாசமான இசையும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஒன்றாக ஒருவரை ஒருவர் பிடித்த வண்ணம் ஆடும் நடனமும் பாடலின் மொத்த வடிவமைப்பும் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.
ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ள இந்த பாடல், தற்போது 95 ஆவது ஒஸ்கார் விருது விழா நடைபெற்று வரும் நிலையில், அசல் பாடல் பிரிவில் அகாடமி விருதைத் தட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.