காலில் அம்பு விட்டு சாகசம் செய்யும் பெண்: பல இலட்சம் பார்வையாளர் கடந்து தீயாய் பரவும் வீடியோ
சமூக ஊடகங்களில் சில நம்பமுடியாத விடயங்களை தினமும் பார்க்ககூடியதாக இருப்பது வழக்கம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயமும் ட்ரெண்டாகி வருகின்றது. அந்தவகையில் தான் தலைகீழாக வில் அம்புடன் இலக்கை எய்து இணையத்தில் புயலை கிளப்பும் பெண்ணின் வீடியோ தற்போது அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.
சாகசப் பெண்
குறித்த வீடியோவில் ஒரு பெண் கைகளில் விடவேண்டிய அம்பை தன்னுடைய காலில் வைத்து பக்கத்தில் இருக்கும் பலூனை குறி பார்த்து எய்கிறார்.
அதில் அவர் தன்னுடைய கைகளை இரு கம்பிகளில் வைத்துக்கொண்டு இந்த சாகச வித்தையை நிகழ்த்தியுள்ளார்.
இப்பெண்ணின் பெயர் ஒரிசா கெல்லி, இப்பெண் கால்களில் அம்பு விடுவதில் தேர்ச்சிப் பெற்றவராவார். இவர் பிரபல ஹாலிவூட் திரைப்படமான Wonder Woman திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இவருக்கு சிறுவயதிலிருந்தே தலைகீழாக அம்பு விடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார்.
மேலும் குறிந்த இந்த வீடியோவானது ஜனவரி 8 ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டது.
தற்போது இந்த வீடியோவை 3.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.