இந்த படத்தில் மறைந்திருக்கும் முகம் முதலில் தெரிந்ததா? உங்களுக்கே தெரியாத ரகசியம் இதோ
ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.
அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.
Optical illusion: இந்த படத்தில் "S" என்ற ஆங்கில எழுத்திற்கு நடுவே இருக்கும் "5" கண்டுபிடிக்க முடியுமா?
அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.
மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
இரண்டு முகம்
குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு முதலில் இரண்டு முகங்கள் தெரிந்தால், நீங்கள் இரக்க குணம் கொண்டவராகவும், உங்களுக்கு பிடித்தவர்களுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறவர்களாகவும் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டிருப்பீர்கள்.
மற்றவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வதால், இதனை பயன்படுத்திக்கொண்டு உங்களை ஏமாற்றவும் மற்றவர்கள் முயற்சிப்பார்கள். மற்றவர்களை எளிதில் நம்பக்கூடிய நீங்கள், அவர்களிடம் உள்ள நல்ல குணத்தை மட்டுமே நீங்கள் பார்ப்பீர்களாம். அதுவே தேவையில்லாத சண்டைகள், பிரச்சனைகளிலும் தலையிடமாட்டீர்கள்.
டோனட்
குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு முதலில் டோனட் தெரிந்தால், உங்களது இலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பீர்கள். வேலையிலும் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள், அதில் வெற்றி பெறுவதற்கு அதிகளவில் யோசனை செய்வீர்கள்.
எப்பொழுதும் வேலையை குறித்து சிந்திப்பதால், எந்த வேலையையும் செய்யாமல் இருக்கவும் உங்களுக்கு பிடிக்காது. இப்படி வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், நீங்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடவோ, தூங்கவோ முடியாது. இதன் விளைவாக ஆரோக்கிய பிரச்சனைகளையும் அதிகம் சந்திப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |