72 மணி நேரமும் பழங்களை மட்டும் சாப்பிட்டால் என்னவாகும்?
நபர் ஒருவர் 72 மணி நேரம் உணவாக பழங்கள் மட்டும் சாப்பிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஊட்டச்சத்து அதிகம் கொண்ட பழங்களை உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் தெரிவு செய்கின்றனர். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நீர்ச்சத்து உடம்பை ஆரோக்கியமாக வைக்கின்றது.
ஒருவர் 72 மணி நேரம் உணவிற்கு பதிலாக பழங்களை எடுத்துக் கொண்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிட்டால்...
வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் பி12, கால்சியம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதுடன், இரத்த சோகை, சோர்வு, நோயெதிர்ப்பு பிரச்சனைகள் மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினையை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் வெறும் பழங்களை மட்டும் சாப்பிடக் கூடாது. கணையம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழங்களை சாப்பிடுவது சிரமத்தை ஏற்படுத்தும்.
பழங்களில் இருக்கும் இயற்கையான சர்க்கரை பல் சிதைவு அபாயத்தையும், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்கின்றது.
சில பழங்களில் பிரக்டோஸ் அதிகமாக இருப்பதாால் உடலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் வீக்கத்தினால் அவதிப்படுபவர்கள் பழங்களை சாப்பிடக்கூடாது.
பழங்களுடன் கட்டாயம் மற்ற உணவுகளை சேர்த்துக் கொண்டால் மட்டுமே உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |