ஆன்லைனில் கமெரா ஆர்டர் செய்த நபர்: பிரித்து பார்த்த போது ஏற்பட்ட பேரதிர்ச்சி
சென்னை, திருவொற்றியூரை சேர்ந்தவர் வினோத். இவர் பிளிப்கார்ட்டில் டமாக்கா ஆப்பரில் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேனான் 300-D கேமராவை சலுகை விலையில் 26,500 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார்.
இவர் கேமராவை கோடக் மகேந்திரா வங்கி மூலம் 12 மாதம் EMI தவணை முறையில் வாங்கியுள்ளார். இன்று காலை பிளிப்கார்ட்டில் இருந்து பார்சல் வந்துள்ளது.
பார்சலை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. உள்ளே இருந்தது கேமரா அல்ல பழைய பொம்மை கேமரா மற்றும் ஒரு பெயிண்ட் டப்பா.
இதையடுத்து ஆன்லைன் நிறுவனத்திற்கு போன் செய்து இதுகுறித்து விசாரித்த போது சரியான பதில் கிடைக்கவில்லை என்பதால் வருத்தமடைந்த வினோத் இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுபோன்ற பல சம்பவங்கள் முன்னதாக நிகழ்துள்ளதால் பொதுமக்கள் இதுமாதிரியான மோசடிகளில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வுடன் இருக்க காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.