உங்களுடைய Debit Card நம்பர் சொல்லுங்க! இந்த மாதிரி Call வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?
சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
பணம் பறிக்கும் மோசடி அதிகரிப்பு
கடந்த சில தினங்களாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி பணம் பறிக்கும் மோசடி அதிகரித்து வருகிறது.
இதற்காக தற்போது பொலிஸார் ஒரு நுட்பமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன்படி மோசடிகள் நடக்கும் என்று தெரியவரும் பட்சத்தில் பொதுமக்கள் 155260 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து சைபர் கிரைம் பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் வேண்டுகோள்
இதுதொடர்பாக சைபர் கிரைம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஆன்லைன் மோசடி என்பதால் எவ்வளவு விரைவாக தகவல்களை பரிமாற்றம் செய்வதால் பொலிஸார் விரைந்து செயற்பட உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் தவிர ஒன்லைன் மோசடி தொடர்பாக இந்த எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.