சப்பாத்திக்கு சூப்பரான ஆனியன் சப்ஜி! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக வீடுகளில் அதிகமான நேரங்களில் சப்பாத்தி தான்.
இதுக்கு சூப்பரான காம்னேஷன் தான் சப்ஜி வட மாநிலங்களின் உணவு வகைகளில் ஒன்றான வெங்காய சப்ஜி.
அந்தவகையில் வெங்காய சப்ஜி எவ்வாறு செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 5
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1/2 துண்டு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு -1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தே.அ
தயாரிப்பு முறை
முதலில் தேவையானளவு சின்ன வெங்காயம் (தோல் உரித்து), இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் வெங்காயத்தை நீளமான வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கவும் பின்னல் அதில் கொஞ்சமாக உப்பு சேர்க்கலாம்.
இதனை தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.
நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான ஆனியன் சப்ஜி தயார்!