நாவூறும் சுவையில் வெங்காய பொடி தோசை! ரொம்ப ஈஸியா செய்யலாம்
பெரும்பாலும் வீடுகளில் அடிக்கடி செய்யும் உணவுப்பொருள்களில் தோசையும் ஒன்று. ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி தோசை செய்து கொடுத்தால் ஒருவித சலிப்பு தட்டுவிடும்.
அதனால் சற்று வித்தியாசமாகவும் முயற்சி செய்த பார்க்கலாம். இதில் வெங்காய பொடி தோசை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தோசை மா - 1 கப்
வெங்காயம் - 1
இட்லி பொடி - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தோசையை மெல்லியதாக சுடவும்.
அதன் மேல் கொத்தமல்லி, வெங்காயம், இட்லிப் பொடி என்பவற்றை தூவி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
இறுதியாக தோசையை திருப்பி வேகவைத்து எடுத்தால் வெங்காய பொடி தோசை ரெடி.