எடையை 2 மடங்கு வேகமாக குறைக்கும் மொறு மொறு பச்சை தோசை... எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
பயறு வகைகளில் ஏராளமான புரதச் சத்து நிறைந்துள்ளது.
பாசிப் பருப்பில் புரதமும், கார்போஹைட்ரேட்டும்,கலோரியும் சரிவிகிதத்தில் கலந்து உள்ளது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பச்சைப் பயறு பெரும் பங்கு வகிக்கின்றது.
எடையை மிக விரைவாக குறைக்க நினைப்பவர்கள் அவித்த பயறை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது.
இதில் தோசை செய்தும் சாப்பிடலாம். இது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
- பச்சைப்பயிறு - 1 கப்
- பச்சரிசி - 1/4 கப்
- தேங்காய்த் துருவல் - 1/4 கப்
- வெல்லம் - 1/2 கப்
- ஏலக்காய் - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
அரிசி, பச்சைப்பயிறு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு தனித்தனியாக அரைத்து கலந்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணிர் விட்டு கெட்டியான பாகு காய்ச்சி வடிக்கட்டி மாவுடன் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் போட்டு நன்கு கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு விட்டு தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் விட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். சுவையான மொறு மொறு பச்சைப்பயிறு இனிப்பு தோசை தயார்.
