ஒரு மாதம் அசைவ உணவு சாப்பிடாமல் இருங்க... உடம்பில் என்னென்ன மாற்றம் நடக்கும்னு தெரியுமா?
ஒரு மாதம் அசைவ உணவினை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடம்பில் என்னென்ன மாற்றம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்களின் விருப்பமான உணவாக அசைவ உணவு இருக்கின்றது. சிலர் தினமும் அசைவ உணவுகளை சாப்பிட கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவார்கள்.
ஆனால் இவ்வாறு சாப்பிடும் நபர்கள் ஒரு மாதம் அசைவ உணவினை சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.
அசைவ உணவை தவிர்த்தால் ஏற்படும் மாற்றம்
அசைவ உணவினை நீங்கள் ஒதுக்கிவிட்டால் உங்களது செரிமானத்தில் முன்னேற்றத்தை காணலாம். ஏனெனில் சைவ உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ள நிலையில், குடல் இயக்கத்திற்கு உதவுவதுடன், ஆரோக்கியமான குடலை பராமரிக்கவும் செய்கின்றது. அசைவத்தில் இருக்கும் கொழுப்புகள் உடம்பிற்குள் செல்லாததால் இரைப்பை குடல் பிரச்சினை இல்லாமல் இருக்கும்.
அசைவ உணவில் இருக்கும் கொழுப்பு சத்து இதய ஆரோக்கியத்திற்கு பிரச்சினையை ஏற்படுத்தும். ஆனால் சைவ உணவுகளில் இயற்கையாகவே கொழுப்பு இல்லாததால், இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயம் குறைகின்றது. கூடுதலாக, சைவ உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற இதய பாதுகாப்பு ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன், உடம்பில் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், வைட்டமின் டி சத்துக்கள் அசைவத்தில் இருப்பதால், சைவப் பிரியர்களுக்கு ஒரு கவலையும் ஏற்படுகின்றது. ஆனால் சரியான திட்டமிடல் செய்து சோயா பால், டோஃபு, கீரைகள் போன்றவற்றில் கால்சியம் அதிகமாக இருக்கின்றது.
சைவ உணவில் இருக்கும் நார்ச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், நாள் முழுவதும் நிலையான ஆற்றலை வழங்குகின்றது. சைவ உணவுகளில் காணப்படும் சில ஊட்டச்சத்துக்கள் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிப்பதுடன், மனநல பிரச்சினையின் அபாயத்தையும் குறைக்கின்றது.
அழற்சி பண்புகளுக்கு எதிராக சைவ உணவுகள் காணப்படுகின்றது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது, இதனால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |