நான் பண்ண அந்த ஒரு தப்பு! கல்யாணமும் ஆகல வாழ்க்கையும் வீணாப்போச்சி..விரக்தியில் புலம்பும் கிரண்!!
'நான் செய்த அந்தவொரு தப்பு தான் என் வாழ்க்கை இப்படி போனதற்கு முக்கிய காரணம்" என சமீபத்தில் நடிகை கிரண் ரதோட் பேட்டியொன்றில் புலம்பியுள்ளார்.
கிரண் ரதோட்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் நடிகை கிரண் ரதோட்டும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
இவர் நடிப்பில், அன்பே சிவம், வில்லன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
சினிமாவிலிருந்து திடீரென மாயமான கிரண் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இன்ஸ்கிராமில் பதிவுகளை விட அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் தான் அதிகமாக இருந்து வருகின்றது.
குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டேன்...
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், “தன் வாழ்க்கையே ஒரு தவறான முடிவால் தான் வீணாகிவிட்டது” என்று பேசியுள்ளார். அதில், “ எனக்கு திருமணம் ஆகவில்லை. நான் தனியாக தான் வாழ்ந்து வருகிறேன். பல படங்களில் நடித்துகொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில், நான் ஒரு தவறான நபரை காதலித்தேன். இதனால் பல பட வாய்ப்புகள் வந்தும் என்னால் நடிக்க முடியவில்லை. காதல், திருமண என என்னுடைய உண்மை வாழ்க்கை விட்டு குடும்ப வாழ்க்கைக்கு ஆசைக் கொண்டேன். சிறிது காலத்திற்கு பின்னர் தான் அவரின் உண்மை முகம் எனக்கு தெரிந்தது.
தற்போது சினிமாவும் இல்லை காதலும் இல்லை..” மேலும், நா அன்று சரியாக இருந்திருந்தால் கண்டிப்பாக நல்ல இடத்திற்கு சென்றிருப்பேன். முட்டாளாகி விட்டேன். தற்போது பட வாய்ப்பிற்கு ஆசைப்படுகிறேன். ஆனால் குறைவாக தான் வருகிறது..” என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், “ கிரணின் வாழ்க்கைக்கு பின்னர் இப்படியொரு கதை இருக்கிறதா?” என அதிர்ச்சியடையும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |