ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழப்பு: பெரும் சோகத்தில் உறவினர்கள்
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தொடர்ந்து உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த வெள்ளிரவெளி பகுதியை சேர்ந்த 42 வயதான கூலித் தொழிலாளி.
இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து கூலித் தொழிலாளியின் சகோதரர்கள் மூன்று பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர்களின் தாயார் பாப்பம்மாளுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் உறவினர்கள் மூலம் மகன்களும், மருமகளும் உயிரிழந்ததை அறிந்த பாப்பம்மாள், அதிர்ச்சியில் இரவு உறக்கத்திலேயே உயிரிழந்தார்.
இவ்வாறு ஒரே குடும்பத்தனைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
