காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க! அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க
சமையலறையில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும் ஓமம். இவை பல உடல் நலப்பிரச்சினை போக்குவதுடன், காலை எழுந்ததும் வெறும்வயிற்றில் பச்சை ஓம விதையினை உண்பதால் ஆரோக்கியமும் மேம்படுகின்றது.
ஓமத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுவதுடன், மார்பு சளியையும் நீக்குகின்றது.
ஓமத்தின் பயன்கள்...
ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அதில் கருப்பட்டி கலந்து காலையில் பருகினால் உடம்பு வலுப்பெறுவதுடன், ஆற்றலையும் பெறலாம்.
ஒரு தேக்கரண்டி ஓமத்தை அரைலிற்றர் நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை வடிகட்டி தினமும் 2 அல்லது 3 முறை தொடர்ந்து பருகிவந்தால், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, தலைவலி போன்ற பிரச்சினை சரியாகும்.
அஜீரணக்கோளாறை சரிசெய்யும் ஓமம் நொதிகள் செரிமானத்தை துரிதப்படுத்துவடன், வயிறு உப்புசம், வாய் துர்நாள்ளம் ஆகியவற்றையும் போக்குகின்றது.
மேலும் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் ஓம தண்ணீரை பருகிவந்தால் நல்ல பலனை காணலாம்.
ஓமத்தை பொடியாக்கி தயிருடன் கலந்து முகத்தில் பூசி, உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகப்பரு மறையும்.