தலைகீழாக நின்று இட்லி சாப்பிடும் முதியவர்! எதற்காக இந்த முடிவு தெரியுமா?
முதியவர் ஒருவர் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்பட்ட தலைகீழாக நின்று இட்லி சாப்பிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
யோகா விழிப்புணர்வு
கோவை வரதராஜபுரம் உப்பிலிபாளையம் ராமசாமி நகரில் உள்ள விநாயகர் கோவிலில், அகஸ்தியர் சன்னதியில் குரு பூஜை விழா நடைபெற்றது.
இந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் யோகா ஆர்.பழனி (70) என்பவர் கலந்து கொண்டதுடன், யோகா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தலைகீழாக நின்று இட்லி சாப்பிடும் அதிசயம்
அப்போது தலைகீழாக நின்றவாறு (சிரசாசனம்) இட்லி சாப்பிட முடிவு செய்த நிலையில், அவரது உதவியாளர் இட்லியை ஊட்டிவி்ட்டார். பின்பு திராட்சை பழம் மற்றும் பால் இவற்றினை சாப்பிட்டு பக்தர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளார்.
சில பக்தர்கள் தங்களது போனில் புகைப்படம் எடுத்துள்ள நிலையில், தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
