யாழில் ஆச்சரியங்கள் நிறைந்த பழமையான கிறீஸ்தவ தேவாலயம்! பின்னணி தெரியுமா?
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலத்தின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்ட ஒரு பழமையான கிறீஸ்தவ தேவாலயம் தற்போது இடிந்த நிலையில் காணப்படுகிறது.
குறித்த தேவாலயம் அல்வாய் நாவலடி சந்தியில் இருந்து வடமேற்கு திசையில் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. மறுபுறம் பார்த்தால் சக்கோட்டை கடற்கரையிலிருந்து தென்புறப் பாதையில் அமைந்துள்ளது.
அக் கோவில் உள்ள வீதி பழைய வேதக் கோயில் வீதி என்றே பெயரிடப்பட்டுள்ளது. இது புனித சவேரியார் ஆலயம் என அழைக்கப்படுகின்றது.
இது 1860 அளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் 1903 அளவில் கைவிடப்பட்டிருக்கலாம் என்றும், அதன் பின்னரே கடற்கரை பகுதியில் புதிய தேவாலயம் கட்டப்பட்டது எனவும் குறிப்பிட்ப்படுகின்றது.
பழைய வேதக் கோயில் தொல்பொருள் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கபட்டு அந்த அறிவித்தல் அங்கு வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இது குறித்த முழுமையான விபரங்களை விரிவாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
