ஸ்மார்ட்போனில் பழைய Call Settings வேண்டுமா? இதை Follow பண்ணுங்க
தற்போது Android மொபைல் போன்களில் இருக்கும் புதிய செட்டிங்ஸ் பிடிக்காத நபர்களுக்கு பழையது போல மாற்றிக்கொள்ள பதிவில் Steps தெரிந்து கொள்ளலாம்.
பழைய callசெட்டிங்ஸ்
தற்போது Android ஸ்மாட் போன்கள் பயன்படத்தும் பயனர்களுக்கு கால் செட்டிங் பழையது போல இல்லாமல் மாற்றமடைந்து இருக்கும். பலரும் இப்படி போக் கால் மாற்றமடைந்நதை கண்டு அச்சப்பட்டனர்.
ஆனால் இல்லை இந்த புதிய மாற்றம் கூகுளாலே கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இதற்காக கூகுள் நிறுவனம் புதிய 'மெட்டிரியல் 3 எக்ஸ்பிரஸிவ்' டிசைனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் அதன் செயலிகள் புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளது. முன்பு இருந்த செட்டிங்சில் இருந்து காலிங் திரை மாறியுள்ளது.
அடுத்து இன்டர்ஃபேஸ் மாறியுள்ளது. இந்த அமைப்பு சில பயனர்களுக்கு பிடிக்கவில்லை இல்லை இது பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தால் இதற்கான சில தீர்வுகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன அதை பார்த்து நீங்கள் மொபைல் போனை பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.
பழைய callசெட்டிங்ஸ் Steps
1- முதலில் மொபைல் போனில் செட்டிங்ஸை தேர்வு செய்து ஆப்ஸை தேர்வு செய்யுங்கள்
2-அடுத்து ஃபோன் ஆப்-ஐ தேர்வு செய்யுங்கள்.
3-இப்போது Screen இல் வலது பக்கத்தின் உச்சியில் உள்ள மூன்று புள்ளிகளை தேர்வு செய்து அதில் 'அன்இன்ஸ்டால் அப்டேட்ஸை' தேர்வு செய்ய வேண்டும்.
4- பின்னர் உங்களுக்கு செயலியை ஃபேக்டரி வெர்ஷனுக்கு மாற்ற வேண்டுமா என கேட்கும். அதற்கு ஓகே கொடுங்கள்.
இப்படி ஒழுங்கு முறையாக செய்து வந்தால் மொபைல் போனின் புதிய அப்டேட் நீக்கப்பட்டு, ஸ்மார்ட்போனின் இயங்குதளம் (Operating System) பழைய வெர்ஷனுக்கு மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
