எம்.ஜி.ஆருக்கு இப்படியொரு பக்கம் உள்ளதா? பல வருடம் கழித்து மனந்திறந்த பிரபல நடிகர்
நடிகர் எம்.ஜி.ஆர் சக நடிகர்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்து ஏ.ஆர்.சீனிவாசன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் 70,80 காலகட்டங்களில் தமிழ் நாடக மேடையில் பிரபல நடிகராக விளங்கியவர் திரு ஏ ஆர் எஸ் என்கின்ற ஏ ஆர் சீனிவாசன்.
இவர் தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப்படங்களையும் நடித்து பிரபலமானவர்.
ஏ ஆர் சீனிவாசனை தற்போது இருப்பவர்கள் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பு இல்லை. மாறாக இவர் நடித்த நாடகமொன்றை எம்ஜிஆர் ஒரு தடவை பாராட்டி பேசியிருந்தார்.
இப்படியான பல சம்பவங்களை ஏ ஆர் சீனிவாசன், எம்.ஜி.ஆர் குறித்தான சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படி என்ன கூறியிருக்கிறார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
“பாராட்டி பேசி சுமாராக, 1 மாதத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. வந்தவருக்கு நான் மேக்கப் போட்டிருந்த காரணத்தினால் அடையாளம் தெரிவில்லை. அவர் மனைவி ஜானகியின் உதவியுடன் என்னை அடையாளம் கண்டுக் கொண்டார்.
பின்னர் பெங்களூர் சென்றுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் எம்.ஜி. ஆருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நான் தந்தியொன்றை படித்து கொண்டிருந்தேன். அப்போது என் தோலில் ஒரு கை, “ தம்பி நான் எம் ஜி ராமச்சந்திரன் ” என்றார். நான் சட்டென எழுந்து அவருக்கு மரியாதை கொடுத்தேன்.
ரசிகர்களின் அன்பு தொல்லை
இதனை தொடர்ந்து என்னிடம் எங்கு செல்கிறேன் என்ற விடயத்தை எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் என் கையோடு தான் விமான நிலையத்திற்குள் சென்றார்.
அவரின் வருகைக்காக சுமாராக 5000 ரசிகர்கள் காத்திருந்தனர். என்னை அவருடன் கண்டவுடன் அவரின் கை என் கையை பிடித்த காரணத்தினால் என்னுடைய கையையும் பிடித்து முத்தம் கொடுத்தனர்.
அங்கிருந்து நான் வெளியில் செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது. அப்போது தான் எம்.ஜி. ஆரின் மகிமை எனக்கு புரிந்தது. எம்.ஜி. ஆர் என்னை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்தார்.
அங்கு சென்று சாப்பிட்டு விட்டு இரவு பத்தரை மணி வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அமெச்சூர் நாடக நடிகரான என்னை அவர் உபசரித்த விதம் என் வாழ்வில் மறக்க முடியாத மாபெரும் நிகழ்வு.” என அழகாக பகிர்ந்திருந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |