வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் எவ்வாறு பயன்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காய்
நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு சிறந்த பலனை அளிக்கின்றதாம்.
செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உதவும் வெண்டைக்காய், ரத்த சர்க்கரை அளவினை ஒழுங்குப்படுத்துவதிலும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் சிறந்ததாகும்.
ஆய்வு ஒன்றின்படி, நீரிழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு, 6 மணிநேரத்திற்கு ஒருமுறை 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரையை குறைக்க உதவுகின்றதாம்.
மேலும் இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, எடையைக் குறைப்பதில் உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.
ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதற்கும் வயிற்று புண்களை குணப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது.
வெண்டைக்காய் நீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளைத் தீர்த்து, உடலின் வலிமையையும் அதிகரிக்கும் என இருதயநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |