தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் இந்த தவறை செய்யாதீங்க... சிக்கல் ஏற்படுமாம்
எண்ணெய் குளியல் சித்த மருத்துவத்தில் நோய் அணுகாமலும் நோயை தீர்க்கும் இன்றியமையாத முறையாகவும் இருக்கின்றது.
பல சித்தர்கள் இதை குறிப்பிட்டிருகின்றனர். தற்போது எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறை மற்றும் கிழமைகள், உணவு இவைகளை குறித்து தெரிந்து கொள்வோம்.
எப்பொழுது குளிக்க வேண்டும்?
சூரிய உதயத்தின் முன்னே அதிகாலையில் நல்லெண்ணெய் அல்லது அவரவர்களுக்கு தேவையான எண்ணெய்யை தடவிக் கொண்டு சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமையும், பெண்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமையிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
இதே போன்று எண்ணெய் தேய்ப்பதிலும் ஒரு முறை உள்ளதாம். அதாவது செவியில் - 3 துளி விட வேண்டும். இவ்வாறு செய்தால் தலை பிணி போக்குமாம்.
கண்ணில் இரண்டு துளி விட்டால் செவி பிணி தீருமாம்.
பாதத்தில் தேய்த்தால் கண்பிணி போகுமாம். பின்பு தலையில் தேய்த்தால் உடல் முழுவதும் நன்மை கொடுக்குமாம்.
செய்யக்கூடாத விடயங்கள் மற்றும் பயன்கள்
அசைவம், மோர் சாதம், பகல் தூக்கம், வெயிலில் சுற்றுதல் இவற்றினை தவிர்க்க வேண்டுமாம்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் பித்தம் தனியும், தலைவலி நீங்கும்.
ஐம்பொறிகள் வன்மையடையும்.
தலை, முழங்கால், கால் ஆகியவை வன்மையடையுமாம்.
உடல் வறட்சி, சொறி, அழுக்கு இவற்றினை போக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |