எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் மறந்தும் கூட இதையெல்லாம் செய்யக்கூடாது! மீறினால் ஏற்படும் விளைவுகள்
எண்ணெய் தேய்து குளிப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. குளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் சில விடயங்களை நாம் செய்யவே கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, கண்டிப்பாக சுடுநீரில்தான் குளிக்க வேண்டும்.
நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும், அன்று ஒருநாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயம் குளிக்க வேண்டும்.
தலைக்கு குளிக்கும் அன்று அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, பிறந்த நட்சத்திரம் மற்றும் திதி, பிறந்த நாள், விரத நாட்கள் போன்ற நாட்களாக இருக்கக் கூடாது. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு போன்ற நாட்களில் தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது.
ஏனென்றால் இந்த நாட்கள் குளிர்ச்சியான நாட்கள் ஆகும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் உறங்கக்கூடாது, பழைய சாதம், கற்றாழை, மோர், இளநீர், தாம்பத்தியம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நம் உடல் சிறிது சோர்வாக இருக்கும். உடல் சோர்வாக இருப்பதற்காக உறங்கச் செல்லக்கூடாது.
அப்படி நீங்கள் உறங்கினால், உங்கள் கண்கள் வழியாக வெளியேறும் உஷ்ணம் உடலிலேயே தங்கி விடும்.
இதனால் கண் எரிச்சல், வயிற்று வலி, தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.