கொசுவை பிடித்துக் கொடுத்தால் சன்மானமா? வினோத அறிவிப்பு எதற்காக தெரியுமா?
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொசுவை கொலை செய்தோ, உயிருடனோ கொடுத்தால் சன்மானம் அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொசுவிற்கு காசா?
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவிவரும் நிலையில், அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்த ஆண்டில் மட்டும் பிலிப்பைன்ஸில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் டெங்கு பாதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை வரவழைக்கும் கொசுக்களை ஒழிக்கவும், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றது.
இதனால் பொதுமக்கள் கொசுவை உயிருடனோ அல்லது உயிரற்றோ கொண்டு வந்தால் 5 கொசுவிற்கு ரூ. 1.50 வீதம் சன்மானம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான நபர்கள் கொசுவை பிடிப்பதையே வேலையாக வைத்து வருகின்றனர். சிலர் சன்மானம் பெறுவதற்காகவே தண்ணீரை தேங்க வைத்து கொசுக்களை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |