லக்கனத்திற்கேற்ப தொழில்.. கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியது..!
Horoscope
Astrology
Hinduism
By DHUSHI
பொதுவாக நாம் ஒரு வியாபாரத்தை தொடங்கும் போது அதற்காக தொடங்கும் நேரம், வியாபாரத்திற்கான பெயர் மற்றும் யோகம் என்பனவற்றை எமது ஜாதகத்தை வைத்து கணிப்பார்கள்.
அந்த வகையில் ஜாதக ரீதியாக நம்பிக்கை உள்ளவர்கள் தங்களது ராசிகேற்ப தொழில் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
மேலும் லக்னத்தில் இருந்து 11-ம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த தொழில் மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் தெரிந்துக் கொள்வோம்.

ஜோதிடம்
- 11-ல் சூரியன் இருக்கப் பெற்றவர்கள் தந்தை வழி தொழில்கள் மூலம் இலாபம் பெறுவார்கள்.
- 11-ல் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் வாகன சுக போக வாழ்வோடு வாழ்வார்கள். ஆண்களுக்கு திருமணத்திற்கு பிறகு புது மனைவியால் சொத்துக்கள் குவியும்.
- 11-ல் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் துணிச்சல் உள்ளவர்கள். பல வழிகளிலும் பொருள் கிடைக்கும். நினைத்த மிகப்பெரிய எண்ணங்கள் கைகூடும். சொந்த நிலமும் வீடுகளும் அமையும்.
- 11-ல் புதன் இருக்கப் பிறந்தவர்களுக்கு மன வளமும் அறிவு வளமும் பெருகும். மாமேதையாக விளங்குவார்கள். பொறியியல், நிர்வாகம், ஆடிட்டர் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

- 11-ல் குரு இருக்கப் பிறந்தவர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வார்கள். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
- 11-ல் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள். பெரும் பகுதி ஊர் சுற்றி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். நாகரிக வஸ்துகள், வாசனைத் திரவியங்கள் விற்றுப் பொருளீட்டுவார்கள்.
- 11-ல் சனி இருக்கப் பிறந்தவர்கள். பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி தொழில் செய்வார்கள். கட்டிடம், ஒப்பந்த தொழில்கள் கை கொடுக்கும்.
- 11-ல் ராகு இருக்கப் பிறந்தவர்கள். ராணுவத்துறைக்குச் சென்று பொருளீட்டுவார்கள். அயல்நாடு சென்று பொருட்களை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் இலாபம் பெறுவார்கள்.
- 11-ல் கேது இருக்கப் பிறந்தவர்கள். திடீர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். ஏழையாகப் பிறந்தவரும் திடீர் லாபத்தைப் பெறுவார்கள். தர்மகாரியம் செய்வார்கள்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US