இதை ஒரு முறை அரைத்து போடுங்க - முகம் தங்கம் போல ஜொலிக்கும்
நம் அழகை மேம்படுத்த பல வழிகளில் முயற்ச்சி செய்வோம். இதற்காக பல விலைகளில் இரசாயன கிரீம்கள், மாசுபாடு போன்றவற்றால் சருமம் சேதப்படும்.
ஆனால் வீட்டி உள்ள பொருட்களை கொண்டே சருமத்தை அழகாக வைத்துக்கொள்ளலாம்.
இது சருமத்தை பாதிக்காது. முகத்திலுள்ள பருக்கள் அழுக்குகள் மற்றும் இன்னும் பல பிரச்சனைகளை ஓட்ஸ் தீர்த்து வைக்கும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் சிறந்தது. ஓட்ஸ், தயிர், மஞ்சள் கலந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால், சரும அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.
வறண்ட சருமத்திற்கு ஓட்ஸ், தேன், பால் கலவை சிறந்தது. எண்ணெய் சருமத்திற்கு ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு நல்லது. அனைத்து சருமத்திற்கும் ஓட்ஸ் மற்றும் பால் கலவை கரும்புள்ளிகளை குறைக்கும்.
ஓட்ஸ் ஃபேஸ் பேக்குகள் சருமத்தை இயற்கையாக சுத்தம் செய்து பொலிவாக்குகின்றன. வறண்ட, எண்ணெய் அல்லது சாதாரண சருமம் என எதுவாக இருந்தாலும், வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |