இந்த பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்காதீங்க... பிரச்சினை ஏற்படுமாம்
சில பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? அது என்னென்ன பழங்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கும் பழங்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட பழங்களில் சில பழங்களை சாப்பிட பின்பு தண்ணீர் அருந்தக்கூடாது.
பெரும்பாலான நபர்களுக்கு அது என்ன பழம் என்பது தெரியாத நிலையில், தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்காதீங்க
தர்பூசணியில் ஏற்கனவே நீர்ச்சத்து அதிகமாக உள்ள நிலையில், இந்த பழத்தினை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனெனில் தண்ணீர் குடித்தால் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரோக்கியத்தினை அளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் இருக்கும் நிலையில், ஆனால் இதனை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்குமாம்.
ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்கும் ஆப்பிளை சாப்பிட்ட பின்பும் தண்ணீர் குடிக்கக்கூடாதாம். ஏனெனில் செரிமானத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
மாதுளையை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இவை வாந்தி குமட்டல் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும்.
வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்ட சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு தண்ணீர் குடித்தால் பிஹெச் அளவு வெகுவாகக் குறைவதுடன், செரிமான பிரச்சனைகளும் ஏற்படும்.
நாவல் பழத்தினை சாப்பிட்ட பின்பும் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |