முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா? இந்த நட்ஸில் ஒன்றை தினமும் சாப்பிட தவறாதீங்க
பொதுவாகவே அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
இதற்காகவே பெருமளவான பெண்கள் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றார்கள். அதில் பெண்களுக்கு அலாதி இன்பம் என்றே செல்ல வேண்டும்.
சரும பராமரிப்பில் அதிக அக்கறை காட்டுபவர்களுக்கு கூட வயது அதிகரிக்கும் போது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இறுக்கத்தன்மை குறைய ஆரம்பிப்பதால் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் சருமம் பொலிவிழப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
இதற்கு போதிய சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைக்காமல் இருப்பது தான் காரணம். அதுமட்டுமன்றி அழகுசாதன பொருட்களினால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் சரும பாதிப்புகள் அதிகரிக்ககூடும்.
இவ்வாறான சருப பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்து எவ்வளவு வயதானாலும் சருமத்தை எப்போதும் இளமையாகவே வைத்துக்கொள்ள தினசரி உணவில் நட்ஸ் மற்றும் விதைகள்களை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இவற்றில் நிறைந்திருப்பதுடன் சருமத்துக்கு தேவையான எண்ணெயும் இதில் அடங்கியுள்ளது சருமத்தை எப்போதும் இளமையாகவும் பொலிவாகவும் பார்த்துக்கொள்ள எந்தெந்த நட்ஸ்கள் உதவிசெய்யும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
வால்நட்
ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும் அதில் காணப்படும் பி 6, பி 9 மற்றும் ஈ ஆகியவை சருமத்தில் நிறமிகளை குறைத்து சருமத்தை இயற்கை முறையில் சிவப்பழகாக்க துணைப்புரிகின்றது.
வால்நட்ஸ் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் காரணமாக வயதான தோற்றம் தள்ளிப்போடப்படுகின்றது. சருமம் நீண்ட காலத்க்கு இளமையாகவே இருக்கும்.
வால்நட்களில் உள்ள தாமிரம் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு துணைபுரிவதன் மூலம் சரும பளபளப்புக்கும் கூந்தல் வளர்சிக்கும் துணைப்புரிகின்றது.
பாதாம்
பெரும்பாலான சரும பாதுகாப்பு தயாரிப்புகளில் பாதாம் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். சருமத்திற்கான நிறைய நன்மைகளைக் பாதாம் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.
பாதாமில் க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலியில் உள்ள ஃபிளாவனாய்டு உள்ளது. இந்தக் கூறு உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இது உங்கள் சருமத்திற்கான வயது எதிர்ப்புப் பண்பை மேம்படுத்த உதவுகின்றது.
பாதாமில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் ஏற்படுவதை தடுத்து சரும அழகை பாதுகாக்கின்றது.
பூசணிக்காய் விதைகள்
மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்த பூசணி விதைகள் ஆரோக்கியமான எலும்பு அடர்த்தியை பராமரிக்க பங்களிக்கின்றன. வைட்டமின் ஈ உட்பட பூசணி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும பாதுகாப்புக்கு பெரிதும் உதவுகின்றது.
இது சருமத்தின் இயற்கையான எண்ணெய் அளவை சீராக வைத்துக்கொள்வதன் மூலம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து சரும பொலிவை அதிகரிக்கின்றது. பளபளப்பான சருமம் மற்றும் வலுவான கூந்தல் வளர்ச்சி ஆகியவற்றில் பூசணி விதைகள் முக்கிய பங்காற்றுகின்றது.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் செலினியம் அதிகளவில் காணப்படுகின்றது. இது வயதான தோற்றத்தை தடுக்கும் முகப்பரு மற்றும் வீக்கத்தை குறைக்கும், நச்சுத்தன்மையை நீக்கும் வலுவான கூந்தலுக்கு சூரியகாந்தி விதைகளின் நன்மைகள் இன்றியமையாதது.
இவ்விதையில், வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் காணப்படுகின்றது.
சூரியகாந்தி விதைகளை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடியையும் மேம்படுத்தும். இது உங்கள் கூந்தல் மற்றும் சரும அழகையும் பாதுகாக்க வல்லது.
பிஸ்தா
பிஸ்தாவில் தியாமின், வைட்டமின் பி6, மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றது.மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும்.
பிஸ்தா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது அவற்றை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை. அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் பினாலிக் கலவைகள் உள்ளன. இது மனஅழுத்தம் மற்றும் நீழிவால் ஏற்படும் சரும பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது.
அதில் பயோட்டினின் அதிகளவில் காணப்டுவதால் முடி உதிர்வைத் தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்துக்கு துணைப்புரிகின்றது. சூரிய கதிர்களால் சருமத்துக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாத்து சருமத்துக்கு பொழிவை கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |