இளவரசி டயானா மறுபிறவி எடுத்துள்ளாரா? கடந்த காலத்தில் டயானா என கூறும் 8 வயது சிறுவன்
தற்போது 8 வயதாகும் ஆஸ்திரேலிய சிறுவனான பில்லி கேம்ப்பெல், இளவரசி டயானாவின் மறு அவதாரம் என்று தன்னை கூறு வருகின்றார், அவருக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே அவர் இது குறித்து பகிர்ந்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் பவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
இவர் பால்மோரல் கோட்டை மற்றும் பாரிஸில் நடந்த கார் விபத்து பற்றிய விவரங்கள் உட்பட டயானாவின் வாழ்க்கையின் விரிவான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றார்.
அவர் சமூகம் மற்றும் அவரின் குடும்ப சூழலில் இருந்து தகவல்களை உள்வாங்கியிருக்கலாம் என சிலர் சந்தேகம் தெரிவிக்கின்ற போதிலும் டயானாவைப் பற்றி விரிவாகப் பேசியதில்லை என்று அவரது பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல் எப்பவர் தான் குறித்த சிறுவனின் தந்தை. இவர் அங்குள்ள ஒரு பிரபல சேனலில், தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பெயர் பில்லி காம்பெல் ( David Campbell).
டயானா மறுபிறவி எடுத்துள்ளாரா?
குறித்த சிறுவனின் பெற்றோர் மேலும் கூறுகையில், "1997ல் இளவரசி டயானா (Princess Diana) கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறந்து 18 வருடம் கழித்துதான், பில்லி ( Billy Campbell) எங்களுக்கு பிறந்தான்.
பில்லிக்கு 2 வயது இருக்கும் போதே , டயானாவின் புகைப்படத்தை காட்டி, அது நான்தான் என்று மழலை மொழியில் கூறினான் அதை கேட்டு அப்போது நாங்கள் சிரித்துவிட்டோம்.
பின்னர் 4 வயதாகும் போது டயானா (Princess Diana) வாழ்க்கை வாழ்வில் நடந்த விடங்கள் பற்றி பேச ஆரம்பித்துவிட்டான் டயானாவின் வாழ்க்கை, அவரது துயர மரணம் இதுகுறித்தெல்லாம் துல்லியமாக குறிப்பிட்டான் இது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து அரச குடும்பம் தொடர்பிலான விடயங்கள் குறித்து நாங்கள் இவ்வளவு துல்லியாக அறிந்திருக்கவில்லை. டயானாவின் (Princess Diana) மொத்த குடும்ப விவரங்களையும் பில்லி ( Billy Campbell) கூறி எம்மை மேலும் ஆச்சயப்படுத்தில் ஆழ்த்தினான்.
டயானாவுக்கு ஜான் என்ற உடன்பிறந்த அண்ணன் இருந்தாராம் அது குறித்து துல்லியாக குறிப்பிட்டான். ஆகஸ்ட் 31, 1997 இல் டயானாவின் உயிரைப் பறித்த பாரிஸில் சோகமான காரைப் பற்றியும் பில்லி குறிப்பிட்டார். என மேலும் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவில் பிரபலமான தொலைக்காட்சி ஆளுமை டேவிட் காம்ப்பெல், ஒரு நேர்காணலில் தனது மகனின் அசாதாரண அறிக்கைகள் குறித்து பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளில் கடந்தகால வாழ்க்கை நினைவுகளின் நிகழ்வு முற்றிலும் புதியது அல்ல. வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் நரம்பியல் நடத்தை அறிவியல் பேராசிரியரான டாக்டர் ஜிம் டக்கர், கடந்த கால வாழ்க்கையை நினைவில் வைத்திருப்பதாகக் கூறும் குழந்தைகளின் வழக்குகளை ஆய்வு செய்துள்ளார்.
சில குழந்தைகள், பொதுவாக இரண்டு முதல் ஆறு வயது வரை, நிகழ்வுகள் மற்றும் முந்தைய இருப்பிலிருந்து வந்தவர்கள் பற்றிய அறிவை வெளிப்படுத்துவதாக அவரது ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
தற்போது இளவரசி டயானா (Princess Diana), மறுபிறவி எடுத்துள்ளதாக டேவிட்டின் இந்த பேச்சுதான் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |