ஜாதிக்காய் தண்ணீர் குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?
ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என மருத்துவ ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக்காய் தண்ணீர்
ஜாதிக்காய் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மசாலா பொருட்களுடன் பயன்படுத்துவார்கள். இது உணவிற்கு சுவை கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும். ஆனால் இதில் எண்ணிலடங்காத சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
இதை காலையில் தினமும் தண்ணீரில் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காய்ப் பொடியை சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது.
இந்த காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தேவையான எண்ணெய் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும் நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
உடலில் ஏற்படும் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. ஒவ்வொரு நாளும் மூளையின் சுறுசுறுப்பிற்கு வழி செய்கிறது. இது ஒரு கழிவுநீக்கியாகும். கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை நீக்குகிறது.
ஜாதிக்காய் ஊறவைத்த தண்ணீரை தினமும் பருகுவதால், அது உங்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது சாதாரணமானது அல்ல இந்த ஜாதிக்காய் பொடிக்கு மனதை அமைதிப்படுத்தும் தன்மை உள்ளது.
அதில் மிரிஸ்டிசின், மெக்கீசியம் போன்ற உட்பொருட்கள் உள்ளது. இவை மனதை அமைதிப்படுத்தி, உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது.
ஜாதிக்காயில் உள்ள வீக்கம் மற்றும் வலி நிவாரணத் தன்மைகள், வலி மற்றும் வீக்கத்தைப் போக்குகிறது. குறிப்பாக ஜாதிக்காய் மூட்டுவலி, ஆர்த்ரிட்டிஸ் மற்றும் தசைவலி போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மிகவும் தேவையானது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |