தவறியும் தயிருடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க... ஆபத்து உறுதி!
பொதுவாகவே பாலை போன்றே தயிரும் உடல் ஆராக்கியத்துக்கு பெரிதும் துணைப்புரிக்கின்றது. ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் சுவைக்காகவும் உலகம் முழுவதும் தயிரை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.
தயிர் பல்வேறு சமையலிலும் கூட சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. தயிரில் உடலுக்கு நன்மை விளைவிக்க கூடிய பாக்டீரியாக்கள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் புரதம் நிறைந்த உணவாகவும் காணப்படுகின்றது.
தயிர் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்ற போதிலும் தயிருடன் குறிப்பிட்ட சில பொருட்களை சேர்த்து சாப்பிடும் போது அது பாதக விளைவை ஏற்படுத்தக்கூடும். அப்படி தயிருடன் ஒருபோதும் சேர்த்து சாப்பிடவே கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
மீன்
ஒருபோதும் தயிரோடு மீன் சேர்த்து சாப்பிட சுடாது. இவை இரண்டின் சேர்க்கை உடலின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி அஜீரனம் மற்றும் பிற செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்
செரிமான நடைமுறைகளின் அடிப்படையில் மீனுக்கும் தயிருக்கும் அதிகளவு வேறுபாடு காணப்படுவதால் இவை உடலில் ஒன்றாக சேரும் போது நச்சுத்தன்மை அதிகரித்து பல்வேறு அசௌகரியங்களையும் தோற்றுவிக்கும்.
மாம்பழம்
மாம்பழம் மற்றும் தயிரை ஒன்றாக சாப்பிடவே கூடாது. காரணம் மாம்பழம் உடல் சூட்டை அதிகரிக்க கூடியது. ஆனால் தயிரோ உடலை குளிர்ச்சியாக்கும் அதனை சேர்த்து சாப்பிடும் போது செரிமான நடைமுறையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு சரும பிரச்சினைகள் வருவதற்கும் காரணமாகின்றது.
வெங்காயம்
வெங்காயம் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்றாலும், இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது உடலில் சூடு அதிகரித்து செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே இவற்றை சேர்த்தது சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
பால்
தயிருடன் ஒருபோதும் பால் சேர்த்த சாப்பிட கூடாது. பாலிலிருந்து தானே தயிர் கிடைக்கிறது. அப்புறம் ஏன் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது? என்ற கேள்வி அனைவருக்கு எழக்கூடும்.
ஏனென்றால் பாலும் தயிரும் சேரும் போது உங்களுக்கு அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. மேலும் பால் மற்றும் தயிரில் அதிகளவு புரதமும் கொழுப்பும் நிறைந்து காணப்படுகின்றது.
எண்ணெய் அதிகமுள்ள உணவுகள்
ஒருபோதும் தயிருடன் அதிக எண்ணெய் கலந்த உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது.அதனால் செரிமான அமைப்பு மந்தமாக செயற்பட ஆரம்பிக்கும். இதனால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |