கோமாவில் இருந்த நபரை மீட்ட “வயாகரா”- ஆச்சரியமளிக்கும் உண்மை சம்பவம்
பிரிட்டனில் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் 28 நாட்கள் கோமாவில் இருந்த நிலையில், மருத்துவர்கள் கொடுத்த ‘வயாகரா’மருந்தால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
இங்கிலாந்தின் லிங்கன்ஷயர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்தா என்ற செவிலியர், மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திருந்த போதும் கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அடிக்கடி சுவாச பிரச்சனை ஏற்பட்டதால், ஐசியூவிற்கு மாற்றப்பட்ட மோனிகாவுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவருக்கு வயாகரா மருந்து அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
வயாகரா மருந்து இரத்த ஓட்டத்தை வேகமாக்கும் என்பதால், மோனிகாவிற்கு அந்த மருந்தை தர முடிவு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர் கோமாவிலிருந்து மீண்டிருக்கிறார், இதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.