இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ வாழ்கையில் கிங் நீங்க தான்
நியூமராலஜி படி எப்போதும் தலைமை குணத்துடன் செயல்படுவார்கள் எந்த இலக்கத்தை கொண்டவர்கள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எண்கணிதத்தின் படி
பிறந்த திகதி 7 ஆக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இயற்கையாகவே சிறந்தவர்கள் மற்றும் தலைவருக்குரிய தகுதி உடையவர்களாக திகழ்வார்களாம்.
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தைரியமான மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளை எடுக்க தயாராக இருக்கும் புத்திசாலிகள்.
அவர்கள் மாற்றத்திற்கு ஏற்றவாறு, வேகமான அமைப்புகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களின் துணிச்சல் மற்றும் நெகிழ்வுத்தன்மையின் காரணமாக அவர்கள் எப்போதும் முன்னிலையில் தான்இருப்பார்கள்.
1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், இயல்பிலேயே தொலைநோக்கு பார்வையுடையவர்கள் மற்றும் தலைவர்களாக பிறந்தவர்கள்.
அவர்கள் எப்போதும் உயர்ந்த இலட்சியங்களை அமைத்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உயர் தரத்தை நிலைநாட்டுவதற்கான இயல்பான திறனைக் கொண்டுள்ளனர்.
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த தந்திரக்காரர்களாகவும்,வலுவான உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்களின் ஆழ்ந்த நுண்ணறிவு மற்றும் புரிதலின் காரணமாக எதிர்கால போக்குகள் மற்றும் மாற்றங்களை அவர்களால் கணிக்க முடிகிறது.