Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் இது தானாம்
பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதை போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
எண் கணணித சாஸ்திரம் தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறை ஆகும்.
இதன் பிரகாரம் எண்களால் ஒருவரை வாழ வைக்கவும் முடியும் அதே போல் வீழ்த்தவும் முடியும் என குறிப்பிடப்படுகின்றது.பிறப்பு எண்களில் நவகிரகங்களின் ஆதிக்கமும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும்.
அந்த வகையில் 2 ஆம் எண்ணை விதி எண்ணாக கொண்டவர்கள் அதாவது 2, 11, 20 அல்லது 29 ஆம் திகதிகளில் பிறந்தவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் வரமாக கருதப்படும் குணங்கள், சாபமாக கருதப்படும் பழக்கங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
விசேட குணங்கள்
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் எளிமையாக மற்றவர்களுடன் பழகக்கூடிய ஆற்றவை பிறப்பிலேயே கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு சந்தேக குணம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமமாகவே இருக்கும். மற்றவர்களின் தேவைகளை அவர்கள் புரிந்துகொண்டு உதவி செய்வதால் சில சமயங்களில் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளலாம்.
இந்த எண்களில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அது இவர்ளுக்கு மகிழ்சியை கொடுக்கும் வரமாக இருக்கும்.
தீராத சுதந்திர உணர்வு காரணமாக இவர்கள் உறவுகளில் சிக்கிக்கொள்ள விரும்புவதில்லை அதனால் வாழ்வில் இறுதி காலத்திலும் பெரும்பாலும் தனியாக இருக்க வேண்டிய துன்பத்தை பெறலாம்.
இந்த எண்களில் பிறந்தவர்கள் கலை துறையில் அதீத ஆர்வம் கொண்டவர்களாகவும், சுற்றுலா செல்வதில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருக்பார்கள்.
அவர்களின் இயல்பான தகவல் தொடர்பு திறனால் மீடியா துறை அவர்களுக்கு பொருத்தமாக துறையாக அமையும். மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள்
பலங்கள்
2 ஆம் எண்களில் பிறந்தவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள், அதனால் இவர்கள் மற்றவர்களை இலகுவாக புரிந்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்.
வாழ்வில் ஏற்படும் மாற்றங்கங்களுக்கு ஏற்ப தங்களை இலகுவாக மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
காதல் விடயங்களில் அதிக ஆர்வமும் முயற்சியும் இவர்களிடம் எப்போதும் இருக்கும். அது இவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளும்.
பலவீனங்கள்
இவர்கள் பொறுப்பெடுத்துக்கொள்ளும் வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள் இது அவர்களுக்கு மனஉளைச்சலையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.
அதிகம் உணர்ச்சிவசப்டும் குணத்தால், காதல் உட்பட அனைத்து உறவுகளின் விடயத்திலும் இலகுவில் மனமுடைந்து போய்விடுவார்கள்.
தங்களுடைய திறமையை சுயமதிப்பிற்கு உட்படுத்திக்கொண்டே இருப்பதன் காரணமாக இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய அதிகம் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |