25 ரூபாய் கடனை அடைக்க அமெரிக்காவிலிருந்து வந்த இளைஞர்! சுவாரசியமான சம்பவம்
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட்ட பணத்தை தருவதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்தவர் மோகன், கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய மகன் நேமனி ப்ரனவுடன்(வயது 10) கொத்தபள்ளியில் உள்ள கடற்கரைக்கு வந்துள்ளார்.
அங்கு ஜின்ஜாலபேட சத்தையா என்ற நபரிடம் இருந்து வேர்க்கடலை வாங்கி சாப்பிட ஆரம்பித்துள்ளார் ப்ரனவ், ஆனால் மோகன் பணம் எடுத்துவர மறந்துவிடவே, அடுத்தமுறை வரும்போது தாருங்கள் என்றுள்ளார் சத்தையா.
ஆனால் திடீரென மோகன் குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு குடியெர்ந்துவிட்டனர், எனினும் ப்ரனிவ்வின் மனது சமாதானம் அடையவில்லை.
எப்படியாவது வேர்க்கடலை வாங்கி சாப்பிட்ட காசை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

மீண்டும் இந்தியா வந்த போது, சத்தையாவை தேடியுள்ளார், அவர் எங்கும் கிடைக்காததால் அந்த பகுதியின் எம்எல்ஏ-வின் உதவியை நாடியுள்ளார்.
மேலும் 12 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, நெட்டிசன்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடைசியில் சத்தையா பற்றி மக்கள் அறிந்துகொள்ள, அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சத்தையாவின் குடும்பத்தினரை சந்தித்த ப்ரனவ், 25 ஆயிரம் ரூபாயை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.