கடைகளில் மயோனைஸ் வாங்குபவரா நீங்கள்? இனி தவறை செய்யாதீங்க
மயோனைஸ் என்று சொன்னதும் உடனே கடைகளில் மட்டும்தான் வாங்க முடியும் என்று நாம் நினைப்போம். ஆனால், தற்போது எல்லாவற்றையும் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இதை சிக்கன் 65, சாண்ட்விச், பாண், பர்கர், பீட்சா போன்றவற்றில் சோஸூடன் மயோனைஸ் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது மயோனைஸை எவ்வாறு வீட்டிலேயே தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 2
எண்ணெய் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
கடுகுத் தூள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - சிறிதளவு
செய்முறை
மிக்ஸியில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ளவும்.
அத்துடன் எலுமிச்சை சாறு, கடுகுத் தூள், உப்பு என்பவற்றை சேர்த்து மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி அரைக்கவும்.
சற்று கெட்டியான பின்பு இறுதியாக எல்லா எண்ணெயையும் ஊற்றி நன்றாக அரைத்தால் மயோனைஸ் தயாராகிவிடும்.