இனி Whatsapp-ல் Internet இல்லாமல் Share செய்யலாமாம்.. விரைவில் நடைமுறைக்கு வரும் அப்டேட்
Whatsapp-ல் இனி வரும் காலங்களில் Internet இல்லாமல் Files பகிரும் புதிய ஆப்ஷன் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆண்டிராய்டு மற்றும் ஐபோனுக்கு இடையே Wireless முறையில் ஃபைல்களைப் பகிரலாம்.
இந்த வசதி தற்போது வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளதால் விரைவில் அமுலுக்கு வரவுள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்தும் போது போனுக்கு இணையம் அவசியமில்லை. மாறாக போனிலுள்ள புளூடூத் மற்றும் அருகிலுள்ள சாதன வசதிகளை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்யலாம்.
இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பரிமாற்றம் செய்வது எப்படி?
Wi-Fi Direct என்ற அம்சத்தைப் பயன்படுத்தி செய்தி அனுப்ப வேண்டிய இயந்திரங்களுக்கு ஆவணங்கள் மற்றும் ரகசியமான கோப்புக்களை பகிரலாம். ஆப்பிள் போன் பயனர்கள் அவர்களின் போனில் iOS வாட்ஸ்அப்பில் ஃபைல்களை பரிமாற்றம் செய்கின்றனர்.
இந்த செயன்முறையின் போது மற்ற பயனரின் ஸ்கேன் செய்யப்பட வேண்டிய QR குறியீடு அவருடைய போனிற்கு வரும். அதனை ஸ்கேன் செய்து ஆவணங்களை பரிமாற்ற ஆரம்பிக்கலாம்.
இந்த அம்சம் கூடிய விரைவில் அனைத்து ஐபோன் வாட்ஸ்அப் பயனர்களுக்கும் Meta நிறுவனம் வழங்கவுள்ளது.
ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களிடம் ஃபைல் பரிமாற்றக் கருவி சோதிக்கப்பட்ட போது இரண்டு சாதனங்களுக்கு இடையேயான புளூடூத் இணைப்பின் உதவியுடன் பரிமாற்றம் செய்யலாம் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. இந்த வசதி விரைவில் அனைவரின் போன்களிலும் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |