ஒருவர் வெளியேறும் போது வீட்டை பெருக்கக்கூடாது ஏன்? இனி தவறு செய்திடாதீங்க
இந்து சாஸ்தித்தின்படி ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது துடைப்பம் பயன்படுத்துவதோ, வீட்டை சுத்தப்படுத்துவதோ கூடாது என்று கூறப்படுகின்றது. இதற்கான காரணம் பலருக்கும் தெரிந்திராத நிலையில், தற்போது தெரிந்து கொள்வோம்.
எந்த நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது?
வீட்டில் உள்ள நபர் வெளியே செல்லும் போது துடப்பத்தை பிடிக்கக்கூடாது. இதே போன்று வீட்டை துடைக்கவும் கூடாது. அவ்வாறு செய்தால் வெளியே செல்லும் நபருக்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது.
ஆனால் துடைப்பம் பற்றிய பல நம்பிக்கைகளும் காணப்படுகின்றது. ஆம் துடைப்பம் லெட்சுமி தேவியின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
துடைப்பத்தை ஒருபோதும் காலால் மிதிக்க கூடாது. இவ்வாறு அவமரியாதை செய்தால் லட்சுமி தேவி நுழைய மாட்டாராம்.
துடைப்பத்தை படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் உங்களது கனவுகளை விரட்டுவதாக அர்த்தமாம். ஆதலால் சரியான திசையில் தான் வைக்க வேண்டுமாம்.
வெளியே செல்லும் துடைப்பத்தை எடுத்து பெருக்கினால் குறித்த நபரின் செயல் வெற்றியை தராது என்றும் அது அபசகுணமாக பார்க்கப்படும் என்று கூறப்படுகின்றது.
வீட்டிற்கு செழிப்பை கொண்டு வர வேண்டும் என்றால், அதிகாலை வேலை வேலையில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டுமாம். சூரியன் மறையும் போது வீட்டை பெருக்கினால் மகாலட்சுமி கோபம் கொள்வாராம்.
நேர்மறை ஆற்றல் வெளியேறி எதிர்மறை ஆற்றல் நுழைவதுடன் நிதி நிலையும் மோசமாகி விடுகின்றது.
வீட்டின் முன்பு துடைப்பத்தை வைக்காமல், வெளியாட்கள் யாரும் பார்க்காத இடத்தில் வைக்க வேண்டும். உடைந்த துடைப்பத்தை வீட்டில் வைக்க வேண்டாம்.
வெள்ளிக்கிழமை புதிய துடைப்பம் வாங்கினால் மங்களகரமானதாக கருதப்படுவதுடன், புத்தாண்டு தினத்தில் புதிய துடைப்பம் வாங்கினால், கடந்த வருடத்தின் தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகின்றது.
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வீட்டின் தரையை துடைத்தால், அவரது நோய் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |