இந்த பொருட்களை திருமணமான பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லவே கூடாதாம்... ஏன்னு காரணம் தெரியுமா?
பிறந்த வீட்டில் எந்தவொரு கவலையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருக்கும் பெண்கள் புகுந்த வீட்டிற்கு சென்றால் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றது.
ஆம் தனது பிறந்த வீட்டையும், உறவினர்களையும் விட்டுவிட்டு எந்தவொரு முன் பழக்கம் இல்லாத கணவரின் வீட்டிற்கு செல்கின்றனர்.
அவ்வாறு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது சில பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லக்கூடாதாம்.. அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கூர்மையான பொருட்கள்
புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள் கூர்மையான பொருட்கள், ஆயுதம் இவற்றினை எடுத்துக்கொண்டு செல்லக்கூடாதாம். உதாரணமாக அரிவாள் மனை, கத்தி, கத்திரிக்கோல் போன்றவற்றை எடுத்துச் சென்றால் பிரச்சினை ஏற்படும்.
துடைப்பம் மற்றும் சுத்தம் செய்யும் பொருட்கள்.
அதே போன்று துடைப்பம், வீடு துடைக்கும் மாப், ஒட்டறை குச்சி இவற்றினை கொண்டு செல்லக்கூடாது, அவ்வாறு கொண்டு சென்றால் சிக்கல் ஏற்படும்.
மளிகை பொருட்கள்
மளிகை பொருட்கள் பிறந்த வீட்டிலிருந்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. அதில் புளி வெந்தயம் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது. அதற்கு பதிலாக காசு கொடுத்துவிட்டு வரலாம்.
மேலும் உப்பு மற்றும் எண்ணெய் கொண்டு செல்லக்கூடாது. ஏனெனில் இது இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் பயன்படுத்தும் பொருள் என்பதால் கூடாதாம்.
அதே போன்று ஈமைக்காரியத்திற்கு பயன்படுத்தப்படும் முறத்தினையும் கொண்டு செல்லக்கூடாது.
பயன்படுத்திய விளக்கு
புகுந்த வீட்டிற்கு செல்லும் போது பயன்படுத்தாமல் புதிதாக இருக்கும் விளக்கைத் தான் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு பயன்படுத்திய விளக்கினைக் கொண்டு சென்றால் லட்சுமி கடாட்சம் வெளியேறிவிடுமாம்.
கசப்பான உணவு பொருட்கள்
பாகற்காய், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை இவற்றினை ஒருபோதும் எடுத்துச் செல்லக்கூடாதாம். இது தேவையற்ற மனக்கசப்பினை ஏற்படுத்திவிடுமாம்.
அரிசி அளக்கும் படி
ஒரு குடும்பத்தின் வறுமை இல்லாத வாழ்விற்கு நாம் கடவுளாக அவதானிக்கும் அரிசி அளக்கும் படியினை எப்பொழுதும், வணங்கிவிட்டுத்தான் நாம் அரிசியை அளக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வீட்டில் எப்பொழுதும் வறுமை இல்லாமல் செல்வம் தங்கியிருக்கும்.
ஆனால் இதனை புகுந்து வீட்டிற்கு கொண்டு சென்றால், பிறந்த வீட்டில் வறுமை ஏற்பட்டுவிடுமாம்.
கோல மாவு, அசைவ உணவு
வீட்டில் மகாலட்சுமியை கொண்டு வருவதற்கு போடப்படும் கோலமாவினை ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாதாம்.
அதே போன்று அசைவ உணவு தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது. காரணம் தூரமாக செல்லும் போது சுடுகாடு இவற்றினை தாண்டி செல்லும் காத்து, கருப்பு தொல்லை வரும் என்பதற்காக... அவ்வாறு கொண்டு செல்ல விரும்பினால் ஏதேனும் இரும்பு பொருள் ஒன்றினை கொண்டு செல்ல வேண்டுமாம்.