Neeya Naana: கல்யாணம் என்றாலே அலறும் பெண்கள்... கோபிநாத் கொடுக்கும் அட்வைஸ் என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் கல்யாணம் கட்டாயம் எல்லாரும் செய்யணும் மற்றும் கல்யாணம் செஞ்சிக்க பயமா இருக்கு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் கல்யாணம் கட்டாயம் எல்லாரும் செய்யணும் மற்றும் கல்யாணம் செஞ்சிக்க பயமா இருக்கு என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

திருமணம் செய்து நினைத்தது போன்று மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் நபர்களின் கருத்துக்களை ஏற்க மறுக்கின்றனர். தான் திருமணம் செய்தால் தற்போது இருப்பது போன்று வாழமுடியாது என்று மற்றொரு புறம் உள்ளவர்கள் வாதாடுகின்றனர்.
பயம் மற்றும் டென்ஷன் காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |