முள்ளங்கியுடன் இந்த உணவை மட்டும் சாப்பிடவே கூடாது.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முள்ளங்கி
ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதில் நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது.
பொதுவாக வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதே போல் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தினைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கவும் இதிலுள்ள நார்ச்சத்து உதவுகின்றது. இந்நிலையில் முள்ளங்கியுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது கூடாதாம்.
அவை ஒவ்வாமைப் பிரச்சனை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது.

முள்ளங்கியுடன் எதை சாப்பிடக்கூடாது?
பாகற்காய் முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடுவது தவறு என ஆயுர்வேதத்தில் கூறப்படுகின்றது. பலரும் முள்ளங்கியை அரிசி, பருப்புடன் சேர்த்து சமைத்து, பாகற்காயை சாலட்டாகவுமு் சேர்க்கின்றனர். இவை உடம்பில் எதிரமறையான செயல்படுவதுடன், ஒவ்வாமை மற்றும் சுவாச பிரச்சனையின் அபாயத்தினை அதிகரிக்கின்றது.
முள்ளங்கி சாப்பிட்ட பின்பு ஆரஞ்சு பழத்தினை சாப்பிடக்கூடாது, ஏனெனில இவை நச்சுத்தன்மை வாய்ந்ததுடன், வயிறு பிரச்சனை மற்றும் வயிறு வலியை ஏற்படுத்தும்.

முள்ளங்கி உணவினை சாப்பிட்ட பின்பு தேநீர் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். இவையும் நெஞ்செரிச்சல் மற்றும் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும். இரண்டும் வெவ்வேறான பண்புகளைக் கொண்டுள்ளதால் எதிர் வினையை ஏற்படுத்தும்.
இரவில் முள்ளங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முள்ளங்கியை சாலடாக சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரத்திற்கு பால் மற்றும் பால்பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் முள்ளங்கி வெப்பமயமாதல் விளைவைக் கொண்டிருப்பதுடன், பால் குளிர்ச்சியாக இருக்கும். ஆதலால் இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது வாயு மற்றும் நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |