நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? இந்த பிரச்சினை வரும் ஜாக்கிரதை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் உடம்பில் என்னென்ன பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்
பெரும்பாலும் மைதா மாவினால் செய்யப்படும் நூடுல்ஸில், நார்ச்சத்து, உட்டச்சத்து குறைவாகவும், அதிகளவு சோடியம் மற்றும் கொழுப்பு உள்ளதால் ஆரோகியத்தில் தீங்கு விளைவிப்பதுடன், சத்தான உணவாகவும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நூடுல்ஸில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளதால் உடல்எடை அதிகரிப்பிற்கு வழிவகுப்பதுடன், விரைவில் செரிமானமாகி பசியை அதிகரிக்கவும் செய்கின்றது.
நூடுல்ஸ் கெட்ட கொழுப்பை அதிகரிக்கவும், நல்ல கொழுப்பை குறைக்கவும் செய்வதால், இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.
நூடுல்ஸ் சாப்பிடுவதால் இதில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோயினை ஏற்படுத்துவதுடன், ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கின்றது.
நூடுல்ஸில் இருக்கும் அதிக கொழுப்பு செரிமான பிரச்சினையை ஏற்படுத்தி மலச்சிக்கலுக்கு வழிவகுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |