ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்ட பெண்! அதில் செய்த சிறிய தவறு: துடிதுடித்து இறந்த சோகம்
விஷம் கலந்த தக்காளியை நூடுல்சில் கலந்து சாப்பிட்ட மும்பை பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நூடுல்ஸ் சாப்பிட நினைத்த பெண்
மும்பை, மலாடில் உள்ள பாஸ்கல் வாடியில் தனது கணவருடன் வசித்து வரும் பெண் ரேகா நிஷாத். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவரும் இப்பெண்ணின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்துள்ளது.
இதனால் எலிகளை ஒழிக்க திட்டமிட்ட அவர் தக்காளியில் விஷம் தடவி வைத்துள்ளார். பின்பு மறுநாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நூடுல்ஸ் செய்து சாப்பிட நினைத்துள்ளார்.

இவ்வாறு நூடுல்ஸ் தயார் செய்யும் போது எலிக்கு விஷம் தடவி வைத்திருந்த தக்காளியை தெரியாமல் எடுத்து நூடுல்ஸ் சமைப்பதற்கு பயன்படுத்திவிட்டு, பின்பு நூடுல்ஸை சாப்பிட்டுள்ளார்.
நூடுல்ஸ் சாப்பிட்ட, சிறிது நேரத்துக்குள் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கணவர் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உண்மை வெளிவந்துள்ளது.