பிரியாணி பிரியரா நீங்கள்? புது விதமாக நூடுல்ஸ் பிரியாணி செய்து அசத்தலாம்!
வித விதமாக பிரியாணி சாப்பிட்டிருப்போம். ஆனால் நூடுல்ஸ் பிரியாணி சாப்பிட்டதுண்டா? நூடுல்ஸுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த சுவைக்கு அனைவரின் நாக்கும் அடிமைதான் அது போலதான் பிரியாணிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இவை இரண்டையும் கலந்து சுவைக்கலாம். நூடுல்ஸ் பிரியாணியாக. வீட்டில் செய்யக்கூடிய இலகுவான உணவு. வாருங்கள் எவ்வாறு செய்யதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் - 500கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 3
ஏலக்காய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
புதினா - 1கொத்து
கிராம்பு - 8
பட்டை - 1துண்டு
சீரக பொடி - 1தேக்கரண்டி
மிளகாய்தூள் -1 தேக்கரண்டி
பச்சைப்பட்டாணி - 1 கப்
கொத்தமல்லி - 1கொத்து
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட நுடுல்ஸை ஒர பாத்திரத்திர் போதுமான அளவு தண்ணீர் வைத்து அரைவேக்கடாக அவித்துக் கொள்ளவும்
பின்னர் வெங்காயம், தக்காளி போன்றவற்றை நன்றாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுத்ததாக பிரியாணி செய்யும் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் பச்சைப் பட்டாணி, தக்காளி, உப்பு, மிளகாய்தூள், புதினா, மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா வாசம் மாறியதும் அாிவ் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் தயார் செய்து வைத்த நூடுல்ஸ் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பை அனைத்து குக்கரை கீழே இறக்கிவிட்டால் போதும்.
சுப்பரான, சுவையான நூடுல்ஸ் பிரியாணி ரெடி.