இறைச்சி கண்டால் தான் சோறு இறங்கும் என்பவருக்கான பதிவு இதோ
பொதுவாக நம்மில் சிலர் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை தான் அதிகம் சாப்பிட ஆசைப்படுவார்கள்.
இவ்வாறு சாப்பிடும் அளவிற்கு அதிகமான கொழுப்புகள் அவர்களின் உடம்பில் தங்க ஆரம்பித்து அதிகபடியான எடை போட்டு விடுவார்கள்.
அடிக்கடி அசைவ உணவுகள் சாப்பிடும் போது செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், சீரற்ற இதய துடிப்பு, அதிக உடல் பருமன் ஆகிய பிரச்சினை வரக்கூடும்.
அதிலும் அதிகமாக பிராய்லர் சிக்கன் சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு இருக்கும். இதனை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் அசைவ உணவினால் என்ன என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்பதனை தெரிந்து கொள்வோம்.
இறைச்சியில்லாமல் சாப்பிட முடியாதா?
1. பொதுவாக ஆண்கள் மது அருந்தும் போது அதற்கு துனையாக சில அசைவ உணவுகளை எடுத்து கொள்வார்கள்.
2. இந்த உணவுகள் மதுவுடன் சேர்ந்து உடலுக்குள் செல்வதால் கொழுப்புடன் , உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.அத்துடன் இந்த பழக்கம் தொடர்ந்து நடந்து வந்தால் பக்கவாதம் கூட ஏற்படலாம்.
3. பெண்கள் அதிகப்படியான இறைச்சி வகைகளை சாப்பிடுவதால் பருமடையாத பெண்களாக இருந்தால் குறைந்த வயதில் பருவமடைந்து விடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் இறைச்சிகளில் ஏற்றப்படுகின்றது ஹார்மோன் தடுப்பூசிகள்.
4. அதிகப்படியான உடல் சூடு ஏற்படும். இதனால் வெள்ளைபடுதல், மாதவிடாய் பிரச்சினை உள்ளிட்ட வயறு தொடர்பான பிரச்சினைகள் வரும்.
5. சுமார் 12 மணி நேரங்கள் வேலை செய்யும் ஒரு நபர் அதிகப்படியான இறைச்சிகளை எடுத்து கொண்டால் அவர்களுக்கு உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும். அத்துடன் செரிமான கோளாறு அளவிற்கு அதிகமாகவே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |