ரூ. 4,999-க்கு அறிமுகமான Noise நிறுவனத்தின் புதிய Smartwatch.., சிறப்பம்சங்கள் இதோ
Noise நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Smartwatch மாடலை அறிமுகம் செய்துள்ளது.
Noise-ன் இந்த புதிய Smartwatch, Noise Colorfit Chrome என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரூ. 4,999-க்கு அறிமுகமான இந்த Smartwatch-ன் சிறப்பம்சங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதன் சிறப்பம்சங்கள்
இந்த Smartwatch-ல் 1.5 inch AMOLED Display, 600 nits brightness, Bluetooth calling மற்றும் உடல் ஆரோக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது.
இது Stainless steel மற்றும் Alloy மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பத்து Contact-களை சேமித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
Noise Colorfit Chrome Smartwatch 100-க்கும் அதிக Sports modes-களை கொண்டிருக்கிறது. இத்துடன் Always On Display, In-built microphone, speaker போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் IP68 grade water மற்றும் Dust resistant வசதி, அதிகபட்சம் 10 நாட்களுக்கான Battery backup, Bluetooth calling வசதியை பயன்படுத்தும் போது 5 நாட்களுக்கு Battery backup வழங்கும் திறன் கொண்டுள்ளது.
இதன் விலை ரூ. 4, 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் Light Midnight Gold, Elite Black மற்றும் Elite Silver ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |