அழுகிய நிலையில் மிதந்து வந்த சடலங்கள்! கங்கை நீரில் கொரோனா வைரஸா? ஆய்வில் வந்த ரிசல்ட்
கங்கையில் குவியல் குவியலாக கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மிதந்து வந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வடமாநிலங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல், ஆஸ்பத்திரி கிடைக்காமல் ஏராளமானோர் இறந்தனர். உயிழிந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடுகள் கூட கிடைக்கவில்லை.
இதனால் புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்தன. இப்படி அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து சடலங்கள் மிதந்து வந்தன.
கங்கையை சுற்றி கிராமங்கள் இருக்கின்றன. அந்த கிராமத்துவாசிகளுக்கு கால்நடைகள்தான் முக்கிய தொழில்.
அதனால், கங்கை நதியில் கால்நடைகளை மேய்ப்பதற்காக காலையில் அழைத்து செல்வது வழக்கம் அப்போதுதான் இப்படி சடலங்கள் மிதப்பதை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.
அந்த சடலங்கள் வெள்ளை துணியால் சுற்றப்பட்டிருந்தது. நிறைய சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் ஷாக்கை மக்களுக்கு ஏற்படுத்தியது.
இதற்கெல்லாம் காரணம், உபி அரசுதான் என்றும், பீகார் மற்றும் உத்தரபிரதேச இரு மாநில எல்லை பகுதி என்பதால் இங்கு வந்து சடலங்களை யோகி அரசு போட்விட்டு போயிவிடுகிறது என்றும், தங்கள் மாநிலத்தை சேர்ந்தவை இந்த சடலங்கள் என்று அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டிய நிகழ்வுகளும் நடந்தன.
இப்படி குவியல் குவியலாக சடலங்கள் மிதப்பதால், தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் சூழ்ந்தது. இதையடுத்து, கங்கை நீரிலும் கொரோனா பரவியதா என்ற ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தேசிய கங்கை தூய்மை திட்ட இயக்கம் சிஎஸ்ஐஆர், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து இது சம்பந்தமான ஆய்வினை நடத்தின.
கங்கை நீரில் உள்ள வைரஸ்களின் ஆர்என்ஏ பிரித்து எடுக்கப்பட்டு அவை ஆர்-பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. இறுதியில், கங்கை நீரில் கொரோனா வைரஸின் தடயங்கள் எதுவும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.